Sunday, August 30, 2009

தலைமை மன்றத்திலிருந்து ஒரு எச்சரிக்கை!


baasha

ஜினி ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாகவும் கறாராகவும் இருந்து வருகிறார்… அது தன் பெயரைச் சொல்லி சில சுயநலக்காரர்கள் செய்யும் வசூல்.

நற்பணி செய்கிறேன், அறக்கட்டளை நடத்துகிறேன், கூழ் ஊற்றுகிறேன், புத்தகம் போடுகிறேன், புண்ணாக்கு தருகிறேன்… இப்படியெல்லாம் கலர் கலராக ரீல் விடுபவர்களை சரியான நேரத்தில் எச்சரித்து விலக்கி வைத்துள்ளது ரஜினி ரசிகர்களின் தலைமை மன்றம்.

“நீங்க மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறீர்களா… அதை நீங்களே நேரடியா செய்ங்க… நான் செய்ய நினைப்பதை நேரடியா நானே செய்வேன். உங்க பாக்கெட்லருந்து நான் பணம் கேட்க மாட்டேன். அப்படித்தான்… நீங்களும் என்கிட்டயிருந்தோ, ரசிகர்களிடமிருந்தோ பணம் கலக்ட் பண்ண முயற்சிக்காதீங்க. உங்களால முடிஞ்சதை செய்யுங்க… இல்லன்னாலும் பரவாயில்லை” -இது ரஜினி தன் ரசிகர் மன்ற சந்திப்பில் கூறியதல்ல… எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தன் ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளுக்குச் சொல்வது.

இன்றைக்கு சில பகுதிகளில், மன்றங்களுக்கு சம்பந்தமே இல்லாத சில நபர்கள் ரகசியமாக, பொய்யான சில தகவல்களைக் கூறி வசூலில் இறங்க முயற்சித்து வருவதாகவும், தலைவரின் பெயரைச் சொல்லிக் கொண்டு நிர்வாகிகளைச் சந்திப்பதாகவும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

குறிப்பாக வட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் இதுகுறித்து தலைமை மன்றத்துக்கு புகார்களையும் அனுப்பியுள்ளனர். நேரிலும் தகவல்களைத் தந்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு தலைவரின் 60 வது பிறந்த தினம் என்பதை மிகத் தவறாகப் பயன்படுத்த, மன்றத்தில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சில நபர்கள் முயற்சித்து வருகிறார்கள். இவர்களிடம் ரசிகர்களும் மன்ற நிர்வாகிகளும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எந்தக் காரணம் கொண்டும் இந்த நபர்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும், தலைவருக்கு இதுபோன்ற செயல்கள் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தும் என்றும் தலைமை மன்றம் எச்சரித்துள்ளது.

-சங்கநாதன்

No comments:

Post a Comment